இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்த ரஷியா


இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்த ரஷியா
x
தினத்தந்தி 13 Nov 2020 2:48 AM GMT (Updated: 13 Nov 2020 5:46 AM GMT)

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டத்தில் இருதரப்பு விஷயங்களை எழுப்பக்கூடாது என்று குறிப்பிட்டு இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானுக்கு ரஷியா கண்டனம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானுக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பை அமைப்புகளின் நாடுகள் கூட்டத்தில் இந்தியாவுடனான பிரச்சினைகளை எழுப்ப பாகிஸ்தான் முயன்றது. இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் மாநாட்டை நடத்திய ரஷ்யாவும் இப்போது பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் பேசிய ரஷிய துணைத்தூதர் ரோமன் பாபுஸ்கின், உறுப்பு நாடுகள் தங்களுக்குள்ளான இரு தரப்பு விவாகரங்களை மாநாட்டில் எழுப்ப கூடாது என்பது அடிப்படை விதி என்றார்.

இந்த விதியை மீற முயன்ற பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

மேலும் அவர் கூறும் போது "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முக்கியத்துவம் என்னவென்றால், பிராந்திய சவால்களை எதிர்கொள்வது, உறுப்பு நாடுகளிடையே பொருளாதார, நிதி, மனிதாபிமான பங்காளித்துவத்தை ஊக்குவிப்பதே ஆகும் ... இந்தியா மற்றும் பாக்கிஸ்தானின் இருதரப்பு பிரச்சினைகளில் நாங்கள் தலையிட மாட்டோம் ... எங்கள் நிலைப்பாடு சீராக உள்ளது மற்றும் மாறாதது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி தோன்றாது என்று நாங்கள் நம்புகிறோம், "என்று அவர் கூறினார்.

Next Story