எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் : பொதுமக்கள் 3 பேர் உயிரிழப்பு
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்,
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதைப் பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. எனினும்,பாகிஸ்தான் திருந்தியபாடில்லை.
இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த துணை ஆய்வாளர் ராகேஷ் தோவல் உயிரிழந்தார். அதேபோல் மேலும், இரு வீரர்களும் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலில், 7 முதல் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
Related Tags :
Next Story