மராட்டியத்தில் இன்று 4,132- பேருக்கு கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் இன்று 4,132- பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 13 Nov 2020 4:22 PM GMT (Updated: 13 Nov 2020 4:22 PM GMT)

மராட்டியத்தில் இன்று 4,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.  இன்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, மாநிலத்தில் புதிதாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,132- ஆக பதிவாகியுள்ளது.  தொற்று பாதிப்பால் இன்று மட்டும் 127- பேர் உயிரிழந்துள்ளனர். 

மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 40 ஆயிரத்து  461- ஆக உள்ளது.  தொற்று பாதிப்புடன் 84 ஆயிரம் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து 16 லட்சத்து 09 ஆயிரத்து 607- பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்து 809- ஆக உள்ளது. 


Next Story