ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
ஜெய்பூர்,
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் ஆனது முதல் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருக்கும் லோங்கெவலா ராணுவ மையத்தில் தீபாவளியை கொண்டாட அங்கு சென்றுள்ளார்.
அவருடன் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே உள்ளிட்டோரும் தீபாவளியை கொண்டாடுகின்றனர். நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக இல்லங்களில் தீபம் ஏற்றி மரியாதை செலுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த போரில் முதலில் சண்டை தொடங்கிய லோங்கெவலா ராணுவ முகாம் மேற்கு பிராந்தியத்தில் முக்கிய பாதுகாப்பு மையமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story