5 நாட்களில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட கியூ.ஆர்.சாம் ஏவுகணை சோதனை வெற்றி


5 நாட்களில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட கியூ.ஆர்.சாம் ஏவுகணை சோதனை வெற்றி
x
தினத்தந்தி 18 Nov 2020 2:13 AM IST (Updated: 18 Nov 2020 2:13 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் 5 நாட்களில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட கியூ.ஆர்.சாம் ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது.

பால்சோர், 

இந்திய ராணுவத்தின், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழக விஞ்ஞானிகள், கியூ.ஆர்.சாம் எனப்படும் நவீன உள்நாட்டு ஏவுகணையை தயாரித்துள்ளனர். இந்த ஏவுகணை வான்வழி இலக்கை துல்லியமாக தாக்கியது.

ஒடிசா மாநிலம் சண்டிபூரில் உள்ள சோதனை மையத்தில் நேற்று பிற்பகல் 3.42 மணிக்கு இந்த ஏவுகணையின் இரண்டாம் கட்ட சோதனை நடத்தப்பட்டது.

ரேடார் மூலமாக நீண்ட தூரத்திலிருந்து வரும் வான் இலக்கை பெற்று தானியங்கி முறையில் கணினியே ஏவுகணையை செலுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி இலக்கை தாக்கி ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக ஆராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கியூ.ஆர்.சாம் ஏவுகணையின் முதல் கட்ட சோதனை கடந்த 13-ந்தேதி நடத்தப்பட்டது. தற்போது 5 நாட்களில் மீண்டும் சோதித்து பார்க்கப்பட்டு உள்ளது. வெற்றிகரமான இந்த சோதனைக்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளை வாழ்த்தினார்.

Next Story