தேசிய செய்திகள்

ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து + "||" + In Odisha, your driving licence will be suspended if you don’t wear helmet

ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து

ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து
ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
புவனேஷ்வர், 

ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்மநாபா பெஹ்ரா கூறுகையில், “

ஒடிசாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஒடிசாவில் நடக்கும் விபத்துகளில் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகிறது. இதைத் தடுக்க கடுமையான விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம்”  என்றார்.

ஒடிசாவில் கடந்த 2019- அம் ஆண்டு நடைபெற்ற 11,064  சாலை விபத்துக்களில் 4 ஆயிரத்து 688 விபத்துகள் இருசக்கர வாகன விபத்துகள் ஆகும். அம்மாநிலத்தில் கடந்த ஆண்டு விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்பு 5 ஆயிரத்து 333 ஆக  இருந்தது. அதில், 2 ஆயிரத்து 398- பேர் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆவர். இவர்களில் 2,156- பேர்  விபத்தின் போது தலைக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. ஒடிசாவில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 கோடி தங்கம்-பணம் கொள்ளை
ஒடிசாவில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம்-பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
3. 5 நாட்களில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட கியூ.ஆர்.சாம் ஏவுகணை சோதனை வெற்றி
ஒடிசாவில் 5 நாட்களில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட கியூ.ஆர்.சாம் ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது.
4. ஒடிசாவில் வனவிலங்குகளுக்கான மாநில வாரியம் மறுசீரமைப்பு
ஒடிசாவில் வனவிலங்குகளுக்கான மாநில வாரியம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
5. ஒடிசாவில் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி : ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு
ஒடிசாவில் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.