பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம்

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர்,
2003-ஆம் ஆண்டு செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினா் ஜம்மு-காஷ்மீா் எல்லைப்பகுதிகளில் இந்திய நிலைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் தொடா்ந்து அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் நவ்ஷெரா துறையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக பாகிஸ்தானை சேர்ந்த ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் நேற்று சுட்டு கொல்லப்பட்டு, அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது, அவர்கள் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Related Tags :
Next Story