டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்: விவசாயிகள் சங்கத்துடன் இன்று பேச்சுவார்த்தை - நரேந்திர சிங் தோமர்


டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்: விவசாயிகள் சங்கத்துடன் இன்று பேச்சுவார்த்தை - நரேந்திர சிங் தோமர்
x
தினத்தந்தி 1 Dec 2020 12:26 AM IST (Updated: 1 Dec 2020 12:26 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்து வரும் போராட்டம் தொடர்பாக விவசாயிகளை அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

புதுடெல்லி, 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டத்துக்காக குவிந்துள்ளனர். அவர்களை டெல்லியில் அனுமதிப்பது தொடர்பாக போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மிகப்பெரும் மோதல் நடந்தது.

இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்து வரும் போராட்டம் தொடர்பாக விவசாயிகளை அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு இன்று அழைப்பு விடுத்துள்ளது. 

 இது தொடர்பாக மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறுகையில், “புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது, அவை விவசாயிகளிடையே சில தவறான எண்ணங்களை ஏற்படுத்தின. அக்டோபர் 14 மற்றும் நவம்பர் 13ம் தேதி விவசாயிகளின் தலைவர்களுடன் நாங்கள் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அந்த நேரத்தில் நாங்கள் அவர்களை போராட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்றும், அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என்றும் வலியுறுத்தினோம்

அடுத்த சுற்று பேச்சுவார்த்தை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது, ஆனால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள், இது குளிர்காலம் மற்றும் கொரோனா பாதிப்புகளும் உள்ளது. எனவே விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை முன்பே நடத்தப்பட வேண்டும். விவசாயிகள் தலைவர்கள் மற்றும் முதல் சுற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள், இன்று (டிசம்பர் 1ம் தேதி) மாலை 3 மணிக்கு விக்யான் பவனுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். 

Next Story