ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்; இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடக்கம்


ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்; இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 1 Dec 2020 5:27 AM IST (Updated: 1 Dec 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் நவ. 28ம் தேதி முதல் டிசம்பர் 19ந்தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22ந் தேதி நடைபெறும்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக பிரிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன. இதேபோன்று தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சி மற்றும் சி.பி.ஐ. (எம்.) ஆகியவை முக்கிய கட்சிகளாக போட்டியிடுகின்றன.

மொத்தம் 43 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தோதல் நடைபெற உள்ளது. இதில் ஜம்முவில் 18 தொகுதிகளும், காஷ்மீரில் 25 தொகுதிகளும் உள்ளன. மொத்தம் 321 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அவா்களில் 125 பேர் ஜம்முவிலும், 196 பேர் காஷ்மீரிலும் போட்டியிடுகின்றனா். மாவட்ட வளா்ச்சிக் கவுன்சிலின் இரண்டாம் கட்ட தேர்தலுடன் 83 தொகுதிகளில் கிராமத் தலைவா் தேர்தலும் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 223 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

2,142 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஜம்முவில் 837 வாக்குப்பதிவு மையங்களும், காஷ்மீரில் 1,305 வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்று அம்மாநில தேர்தல் ஆணையா் கே.கே.சா்மா நேற்று தெரிவித்தார்.

Next Story