டெல்லியில் இன்று 4,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


டெல்லியில் இன்று 4,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 4 Dec 2020 1:27 PM GMT (Updated: 4 Dec 2020 1:27 PM GMT)

டெல்லியில் இன்று 4,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் இன்று 4,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,86,125 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் இன்று 73 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,497 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இதுவரை 5,48,376 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 28,252 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story