கர்நாடகாவில் இன்று 1,247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கர்நாடகாவில் இன்று 1,247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 4 Dec 2020 3:22 PM GMT (Updated: 4 Dec 2020 3:22 PM GMT)

கர்நாடக மாநிலத்தில் இன்று 1,247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, கர்நாடகாவில் இன்று 1,247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,90,360 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் இன்று 13 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,834 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 8,53,461 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 25,046 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story