மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 3,824 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 3,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மும்பை,
மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 824 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 18 லட்சத்து 68 ஆயிரத்து 172 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 008 பேர் குணமடைந்தனர். இதுவரை மாநிலம் முழுவதும் 17 லட்சத்து 47 ஆயிரத்து 199 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைவோர் விகிதம் 93.52 சதவீதமாக உள்ளது. தற்போது மாநிலத்தில் 71 ஆயிரத்து 910 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல மாநிலத்தில் புதிதாக 70 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 47 ஆயிரத்து 972 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story