சபாஹர் துறைமுக பயன்பாடு குறித்து இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் இடையே முத்தரப்பு மாநாடு


சபாஹர் துறைமுக பயன்பாடு குறித்து இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் இடையே முத்தரப்பு மாநாடு
x
தினத்தந்தி 12 Dec 2020 1:44 PM IST (Updated: 12 Dec 2020 2:44 PM IST)
t-max-icont-min-icon

ஈரானின் சபாஹர் துறைமுக பயன்பாடு குறித்து இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் இடையே வரும் 14 ஆம் தேதி முத்தரப்பு மாநாடு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஈரானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சபாஹர் துறைமுகத்தை இந்தியா, ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டாக பயன்படுத்துவது தொடர்பான முத்தரப்பு மாநாடு வரும் 14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் துணை அமைச்சர்கள் மற்றும் இந்தியாவின் செயலாளர் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று பிரதமர் போடி காணொலி காட்சி வாயிலாக  உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயெவ் உடன் நடத்திய உச்சிமாநாட்டில் ஈரானின் சபாஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று முத்தரப்பு மாநாடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சபாஹர் துறைமுகத்தை கூட்டாக பயன்படுத்துவதன் மூலம் இந்தியா, ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதார செயல்பாடுகள் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story