ஆந்திராவில் இன்று 478 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஆந்திராவில் இன்று 478 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 16 Dec 2020 2:11 PM GMT (Updated: 2020-12-16T19:41:17+05:30)

ஆந்திர மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,76,814 ஆக அதிகரித்துள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று 478 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,76,814 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் இன்று 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 7,067 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 715 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,65,327 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 4,420 பேர் சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story