ஒடிசாவில் பிரித்வி–2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை


ஒடிசாவில் பிரித்வி–2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
x
தினத்தந்தி 16 Dec 2020 11:17 PM IST (Updated: 16 Dec 2020 11:30 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் பிரித்வி–2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

பாலாசோர், 

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நடுத்தர வகை ஏவுகணையான பிரித்வி–2 இன்று ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து செலுத்தி சோதிக்கப்பட்டது. இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கியது.

உடனடி செயலாற்றுதல் மற்றும் போர்த்திறன் படைத்த இந்த ஏவுகணைகள் 500 கிலோ வெடிபொருட்களுடன் 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் திறன் பெற்றவை ஆகும். எனினும் 1000 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களையும் சுமந்து செல்ல இதை பயன்படுத்த முடியும்.

ஏவுகணை சோதனையை இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் கண்காணித்தனர்.
1 More update

Next Story