மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்: இடதுசாரிகளுடன் கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்தது + "||" + Congress seals alliance with Left for West Bengal assembly polls
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்: இடதுசாரிகளுடன் கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்தது
வருகிற மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்து உள்ளது.
கொல்கத்தா :
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, அங்கு வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதவாக்கில் தேர்தல் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரசிடம் இருந்து பா.ஜனதா ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்தது. இடதுசாரி கட்சிகளும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்தன. இதன்படி மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இடதுசாரி கட்சிகள் கூட்டணி சேர்ந்து உளளன.
இதையடுத்து இன்று இடதுசாரி கட்சிகளுடனான கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்தது. இதை அக்கட்சியின் மாநில தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இன்று காங்கிரஸ் மேற்கு வங்கத்தின் வரவிருக்கும் தேர்தலில் இடது கட்சிகளுடன் தேர்தல் கூட்டணிக்கு முறையாக ஒப்புதல் அளித்துள்ளது என்று அவர் டுவீட் செய்துள்ளார்.
கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக யாரையும் முன்வைக்குமா என்று கேட்டதற்கு, சவுத்ரி, இந்த விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. தேர்தல்களில் ஒன்றாக போட்டியிடுவது மட்டுமே முன்னுரிமை என கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற கட்சி தலைவருமான சுஜன் சக்ரவர்த்தி கூறும் போது தேர்தலுக்கான எங்கள் திட்டமிடலை நாங்கள் விவாதிக்க வேண்டும், இப்போது காங்கிரஸ் உத்தேச ஒப்பந்தத்திற்கு முறையாக ஒப்புதல் அளித்துள்ளது என கூறினார்.
2019 மக்களவைத் தேர்தலில், காங்கிரசும் இடதுசாரிகளும் மோசமாக பாதிக்கப்பட்டனர், அதே நேரத்தில் பா.ஜனதா மாநிலத்தின் 42 இடங்களில் 18 இடங்களை கைப்பற்றியது. இடது சாரிகள் ஒன்பது இடங்களை வென்றன, காங்கிரசின் எண்ணிக்கை நான்கில் இருந்து இரண்டாக குறைந்தது என்பது குறிப்பிட தக்கது.