தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு மீண்டும் கொலை மிரட்டல்


தொழில் அதிபர்   முகேஷ் அம்பானிக்கு  மீண்டும் கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 31 Oct 2023 6:35 PM IST (Updated: 31 Oct 2023 7:00 PM IST)
t-max-icont-min-icon

பணத்தை கொடுக்கவில்லை என்றால் முகேஷ் அம்பானியை கொலை செய்து விடுவதாக என மர்ம நபர் மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்து இருந்தார்.

மும்பை

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மும்பையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முகேஷ் அம்பானியின் நிறுவனத்துக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில் ரூ.20 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. பணத்தை கொடுக்கவில்லை என்றால் முகேஷ் அம்பானியை கொலை செய்து விடுவதாக என மர்ம நபர் மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்து இருந்தார்.

கொலை மிரட்டல் இ-மெயில் குறித்து காம்தேவி போலீசில் அண்டிலா பாதுகாப்பு அதிகாரி புகார் அளித்தார். அந்த புகாா் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் மறுநாளே 200 கோடி கேட்டு மீண்டும் ஒரு கொலை மிரட்டல் வந்தது. இந்தநிலையில் 3-வது முறையாக இ-மெயிலில் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை மர்ம நபர் ரூ.400 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.


Next Story