காஷ்மீரில் வன பகுதியில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்; பாதுகாப்பு படை நடவடிக்கை


காஷ்மீரில் வன பகுதியில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்; பாதுகாப்பு படை நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Feb 2021 8:09 AM IST (Updated: 1 Feb 2021 8:09 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் வன பகுதியில் இருந்து சிறிய மற்றும் பெரிய ரக துப்பாக்கிகள், தோட்டாக்களை இந்திய ராணுவம் கைப்பற்றி உள்ளது.

ஜம்மு,

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் கவாஸ் நகரில் கத்யோக் என்ற இடத்தில் அமைந்த வன பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில், வன பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் கைத்துப்பாக்கிகள், பெரிய ரக துப்பாக்கி, வெடிக்காத தோட்டாக்கள், தோட்டா உறைகள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இதனால் அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா? என்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story