டெல்லியில் சமூக நிகழ்வுகளில் 200 பேருக்கு மேல் ஒன்று கூட தடை; அரசு அறிவிப்பு
டெல்லியில் அறையில் நடைபெறும் சமூக நிகழ்வுகளில் 200 பேருக்கு மேல் ஒன்று கூட அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு எடுத்து வருகிறது.
முக கவசங்களை அணிவது கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது. அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும், கட்டுப்பாடுகளும் நீடிக்கின்றன. இந்த நிலையில், சமூக, மத, கலாசார நிகழ்ச்சிகள் அல்லது திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை பற்றி திருத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதன்படி, பூட்டிய நிலையில் உள்ள அறைக்குள் 200 பேருக்கு மேல் ஒன்று கூட அனுமதி இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது. எனினும், திறந்த வெளியில் கூட்டம் கூடுவதில் வரம்புகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story