கொரோனா தடுப்பூசிக்கு 50 லட்சம் பேர் பதிவு இதுவரை 2 லட்சம் பேருக்கு போடப்பட்டது

x
தினத்தந்தி 3 March 2021 6:36 AM IST (Updated: 3 March 2021 7:23 AM IST)
t-max-icont-min-icon

60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் வசதி, நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தொடங்கியது.

புதுடெல்லி,

இதுவரை சுமார் 50 லட்சம்பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

அதுபோல், இந்த பிரிவினரில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 791 பேருக்கு இதுவரை முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறியது.

Next Story