நோட்டா வாக்கு அதிகமாக இருந்தால் தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு


நோட்டா வாக்கு அதிகமாக இருந்தால் தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 15 March 2021 8:19 AM GMT (Updated: 15 March 2021 8:51 AM GMT)

வேட்பாளரை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் தேர்தலை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், தேர்தலில் ஒரு தொகுதியில் வேட்பாளரை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், மறு தேர்தலின் போது ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story