ஆந்திரா: திருமலையில் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 March 2021 7:53 AM IST (Updated: 30 March 2021 7:53 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலம் திருமலையில் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.

திருப்பதி, 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, புதிய விதிமுறைகளை நேற்று முதல் அமல்படுத்தியது. 

தரிசன டிக்கெட் பெற்று நடைபாதை மார்க்கத்தில் திருமலைக்கு வர விரும்புபவர்கள் 24 மணி நேரத்துக்கு முன்பே செல்ல அனுமதிக்கப்படுவர். அடுத்த நாளுக்கான தரிசன டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்கள் மதியம், 1:00 மணிக்கு மேல் மட்டுமே வாகனங்கள் வாயிலாக திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். ஆனால், இதுகுறித்து முன்னறிவிப்பு இல்லாததால் பக்தர்கள் பலர் வழக்கம் போல் நேற்று காலை திருமலைக்கு செல்ல அலிபிரி சோதனைச் சாவடியில் குவிந்தனர். 

அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. செவ்வாய் கிழமைக்கான (இன்று) தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மதியம், 1:00 மணிக்கு மேல் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், சோதனைச் சாவடியில் வாகனங்கள் வரிசையில் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 
1 More update

Next Story