தேசிய செய்திகள்

திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் + "||" + Election Commission asks DMK leader A.Raja to explain his stance over his remarks against Tamil Nadu CM Edappadi Palaniswami's mother.

திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
முதல்வர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை,

முதல்வர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

முதல்வா் பழனிசாமி தொடர்பாக நீலகிரி  மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, தேர்தல் பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில்  பேசியதாக புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தப் புகாா்கள் தொடா்பாக அறிக்கை தர தோதல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

அதன்படி, மாவட்டத் தோதல் அதிகாரி, காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டன. இதையடுத்து அந்த அறிக்கை தோதல் ஆணையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இவ்விவகாரத்தில் திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் நாளை ( 31 ஆம் தேதி) மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க ஆ.ராசாவுக்கு  தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் - சுப்ரீம் கோர்ட் அறிவுரை
கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என ஐகோர்ட் கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
2. வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்றம் திருப்தி
வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
3. 5 மாநில வாக்குஎண்ணிக்கை :மே - 2 வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை
மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதும், தேர்தல் முடிவுக்குப் பின்னரும் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
4. கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் -சென்னை ஐகோர்ட்
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என்று சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
5. 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஓட்டுபோட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இந்திய தேர்தல் ஆணையம் வெளியீடு
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.