டெல்லி: சப்தர்ஜங் மருத்துவமனை ஐசியூ பிரிவில் தீ விபத்து

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவனையின் ஐசியூ பிரிவில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
டெல்லி,
டெல்லியில் சப்தர்ஜங் பல்நோக்கு மருத்துவமனை உள்ளது. இந்தியாவிலேயே அதிக படுக்கைகளை கொண்ட இந்த மருத்துவமனை மத்திய அரசால் இயக்கப்படுகிறது. இங்கு நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூ வார்டான தீவிர சிகிச்சை பிரிவில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து, உடனடியாக தீயணைப்பு படையிருக்கு தகவல்கொடுக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஐசியூ வார்டில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முதல்கட்ட விசாரணையில் ஐசியூ வார்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story