கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்படடோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 April 2021 3:25 PM GMT (Updated: 7 April 2021 3:25 PM GMT)

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கர்நாடகத்தில் இன்று புதிதாக 6,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 33 ஆயிரத்து 560 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 35 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தநிலையில், பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 ஆக உயர்ந்து உள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2,794 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 9 லட்சத்து 71 ஆயிரத்து 556 பேர் குணம் அடைந்து உள்ளனர். தற்போது 49 ஆயிரத்து 254 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் அதில் 353 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story