மத்திய அரசை இந்த செய்தி உங்களுக்கு தான் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவை கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் உலுக்கி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என துவக்கம் முதலே ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், இன்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
கொரோனா பாதிப்பு உடலில் ஆக்சிஜன் அளவை குறைய காரணமாக உள்ளது. ஆனால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் மற்றும் ஐசியூ படுக்கைகள் பற்றாக்குறையே காரணமாக உள்ளது” எனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து மத்திய அரசும், டெல்லி அரசும் பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு இதுவரை 71 லட்சத்து 3 ஆயிரத்து 950 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 8.83 சதவீதம் வீணானதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிததுள்ளது.