தேசிய செய்திகள்

நெருக்கடியான காலகட்டத்தில் உதவி; சிங்கப்பூர் அரசுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு + "||" + Assistance in times of crisis; Rajnath Singh praises the Government of Singapore

நெருக்கடியான காலகட்டத்தில் உதவி; சிங்கப்பூர் அரசுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

நெருக்கடியான காலகட்டத்தில் உதவி; சிங்கப்பூர் அரசுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
இந்தியாவுக்கு நெருக்கடியான காலகட்டத்தில் உதவி செய்த சிங்கப்பூர் அரசுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.  முதல் அலையில் அமெரிக்கா உள்பட பல உலக நாடுகள் அதிக பாதிப்புகளை சந்தித்தன.  இதனால், அந்த நாடுகளுக்கு இந்தியா மருந்து சப்ளை செய்து உதவியது.  இதற்கு ஐ.நா.சபையும் பாராட்டு தெரிவித்து இருந்தது.

நடப்பு ஆண்டில் தொடக்கத்தில் பாதிப்பு சரிவை நோக்கி சென்றது ஆறுதல் அளித்தது.  ஆனால், உலக அளவில் மக்கள் தொகையில் 2வது இடத்திலுள்ள இந்தியாவில் பாதிப்பின் தீவிரம் நாள்தோறும் உச்சமடைந்து வருகிறது.  இதனால், பல உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவுடனான விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.

நாட்டில், 3 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்றுக்கு நேற்று ஆளாகி இருந்தனர்.  3 ஆயிரத்து 293 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.  இந்நிலையில், இன்று ஒரே நாளில் 3,79,257 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்றுடன் ஒப்பிடும்பொழுது, இது புதிய உச்சம் ஆகும்.

தொடர்ந்து உலக அளவில் அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, ரஷ்யா மற்றும் பல நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என உறுதியளித்து இருந்தன.

இதேபோன்று சிங்கப்பூர் அரசும் இந்தியாவுக்கு உதவ தயார் என அறிவித்து உள்ளது.  இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறும்பாழுது, சிங்கப்பூரின் பாதுகாப்பு துறை மந்திரி இங் எங் ஹென் உடன் தொடர்பு கொண்டு பேசினேன்.  இதில், கொரோனா பெருந்தொற்றின் 2வது அலைக்கு எதிரான போரில் வாய்ப்புகளை வலுப்படுத்துவது பற்றி இருவரும் பேசினோம்.

இந்தியாவில் தீவிரமடைந்துள்ள 2வது அலையால் ஏற்பட்டு உள்ள நெருக்கடியான காலகட்டத்தில் ஆதரவுடன் எங்களுக்கு உதவி செய்து வரும் சிங்கப்பூர் அரசின் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டேன் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தமிழக அரசின் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தமிழக அரசின் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு ‘காவிரி படுகையின் புனிதமும், செழுமையும் பாதுகாக்கப்பட வேண்டும்’.
2. வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட், சேவை உரிமை சட்டம்: கவர்னர் உரைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு
தமிழகத்தில் வேளாண்மைத்துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வரப்படும் என்று கவர்னர் உரையில் இடம் பெற்ற அறிவிப்புகளுக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
3. கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த மாணவிக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பாராட்டு
கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த 10-ம் வகுப்பு மாணவிக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அந்த மாணவி நேரடியாக வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜராகி நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தார்.
4. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் திருப்தி ஐகோர்ட்டு பாராட்டு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கிறது என்று சென்னை ஐகோர்ட்டு பாராட்டியுள்ளது.
5. பள்ளி கட்டிடம் கட்ட 2-ம் வகுப்பு மாணவி கோரிக்கை பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் மாணவியை சந்தித்து பாராட்டு
பள்ளி கட்டிடம் கட்ட 2-ம் வகுப்பு மாணவி கோரிக்கை விடுத்ததையடுத்து பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி மாணவியை சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.