தேசிய செய்திகள்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20,394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + In Delhi 20394 people confirmed with corona infection in the last 24 hours

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20,394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20,394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,94,946 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாட்டின் தலைநகர் டெல்லியில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது.

இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 20,394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,94,946 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 407 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,966 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 24,444 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,85,690 ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லி முழுவதும் தற்போது 92,290 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தை தாண்டியது
டெல்லியில் இன்று மேலும் 27,047 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.86 லட்சம் பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் புதிதாக 24,235 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 395 பேர் பலி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்
டெல்லியில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் இல்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
5. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 77 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
பிரேசிலில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.45 கோடியாக அதிகரித்துள்ளது.