“கொள்கை இழந்த அரசால், கொரோனாவை வெல்ல முடியாது”; மத்திய அரசு மீது ராகுல்காந்தி தாக்கு
வயநாடு எம்.பி.யும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி, கொரோனா விவகாரத்தில் மோடி அரசாங்கம் மீது கடுமையான தாக்குதல் தொடுத்தார்.
“கொள்கை முடங்கிய அரசாங்கத்தால், கொரோனா வைரசுக்கு எதிராக பாதுகாப்பான வெற்றியை பெற முடியாது. அதை எதிர்கொள்ளுங்கள், அதை பொய்யாக மாற்றாதீர்கள்” என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
கடந்த மாதம் 28-ந்தேதியும் ராகுல் காந்தி, மோடி அரசாங்கத்தை விமர்சித்திருந்தார். அப்போது, “அதிக அளவிலான பொதுமக்களின் பணம், தனியார் கம்பெனிகளின் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்க வழங்கப்பட்டுள்ளது, தற்போது அதே தடுப்பூசி அதிக விலைக்கு அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் விற்கப்படுகிறது” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story