டெல்லியில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; நோயாளிகள் அனைவரும் மீட்பு


டெல்லியில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; நோயாளிகள் அனைவரும் மீட்பு
x
தினத்தந்தி 5 May 2021 5:22 AM IST (Updated: 5 May 2021 5:22 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருந்து அனைத்து நோயாளிகளும் பாதுகாப்புடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உள்ள சூழலில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் போதிய அளவில் இல்லாமல் காணப்படுகிறது.  கொரோனா தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கையாக போடப்பட்டு வரும் தடுப்பூசிகளும் கிடைக்காமல் பற்றாக்குறை நிலை உள்ளது.

இந்த நிலையில், டெல்லியின் விகாஸ்புரி பகுதியில் யூ.கே. நர்சிங் ஹோம் என்ற பெயரில் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த மருத்துவமனையில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  

இதுபற்றிய தகவல் டெல்லி தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது-  உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைத்து கட்டிடத்தில் சிக்கிய நோயாகள் அனைவரையும் மீட்டு உள்ளனர்.  அனைத்து நோயாளிகளும் பாதுகாப்புடன் மீட்கப்பட்டு விட்டனர் என டெல்லி தீயணைப்பு துறை இயக்குனர் அதுல் கார்க் தெரிவித்து உள்ளார்.


Next Story