கோவாவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்துவதற்கு தடை விதிப்பு
கொரோனா பரவல் காரணமாக கோவாவில் சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பனாஜி,
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்து வருகின்றன. கொரோனா பரவல் அதிகம் ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கோவாவிலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று வெளியான அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 3,869 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 58 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவா அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவாவில் சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கும், இசைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் வழங்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்படுவதாக கோவா பொழுதுபோக்கு சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.பி.தேசாய் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் தாக்கம் எப்போது குறையும் என்பது தெரியாததால், மறுஉத்தரவு வரும் வரை தற்போதைய உத்தரவு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story