கொரோனா வைரஸ் சூழல் படுமோசமாக செல்கிறது; பிரதமரும், சுகாதார துறை மந்திரியும் பொறுப்பேற்க மறுக்கிறார்கள்; ப.சிதம்பரம் சாடல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் சூழல் மோசத்திலிருந்து படுமோசமான நிலைக்கு சென்றுவிட்டது.
ஆனால், பிரதமர் மோடியும், சுகாதாரத்துறை மந்திரியும் பொறுப்பேற்க மறுக்கிறார்கள் என ப.சிதம்பரம் விமர்சித்தார்.
ப.சிதம்பரம் சாடல்முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் சூழல் மோசமான நிலையிலிருந்து படுமோசமான நிலைக்கு சென்றுவிட்டது. தடுப்பூசிகள் போதுமான அளவில் இல்லை என்பது கசப்பான உண்மை. ஆனால், மத்திய அரசு அதை மறுக்கிறது. தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுக்கவில்லை.
பொறுப்பு ஏற்க மறுக்கிறார்கள்சிறிய அளவிலான மக்கள் மட்டுமே 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள். 18 வயது முதல் 44 வயதுள்ளவர்களில் யாரும் தடுப்பூசி செலுத்தவில்லை. இந்த சூழல் மற்ற மாநிலங்களிலும் பெரிய அளவில் வேறுபடவில்லை.
பிரதமர் மோடியும், சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தனும் இதற்கு பொறுப்பேற்க மறுக்கிறார்கள். இருவரும் ஜனநாயகத்தின் கொள்கைகளை கேலிக்கூத்தாக்குகிறார்கள்.
இ்வ்வாறு அவர் கூறியுள்ளார்.