“தடுப்பூசி மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய மறுப்பது ஏன்?” - மணீஷ் சிசோடியா கேள்வி


“தடுப்பூசி மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய மறுப்பது ஏன்?” - மணீஷ் சிசோடியா கேள்வி
x
தினத்தந்தி 29 May 2021 6:00 PM GMT (Updated: 29 May 2021 6:00 PM GMT)

கொரோனா தடுப்பூசிகள் மீதான ஜி.எஸ்.டி. வரியை, மத்திய அரசு ரத்து செய்ய மறுப்பது ஏன் என டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு இன்று கூடியது. டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் நிதித்துறை ராஜாங்க மந்திரிகள், மாநில நிதி மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றார்கள். அந்த வகையில் இன்றைய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்றும், தடுப்பூசிகளின் மீதான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு ரத்து செய்ய மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். 

தடுப்பூசிகள் மற்றும் கொரோனா சிகிச்சை உபகரணங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை  நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய அரசு அதிகாரிகள் எதிர்ப்பதாகவும் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டினார். மத்திய அரசு, மாநிலங்களுக்கு தடுப்பூசி வினியோகத்தில் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Next Story