கர்நாடகம் இதுவரை 136 ஆக்சிஜன் டேங்கர்களை பெற்றுள்ளது; தென் இந்தியாவில் முதல் இடம் - ரெயில்வே நிர்வாகம் தகவல்


கர்நாடகம் இதுவரை 136 ஆக்சிஜன் டேங்கர்களை பெற்றுள்ளது; தென் இந்தியாவில் முதல் இடம் - ரெயில்வே நிர்வாகம் தகவல்
x

தென் இந்தியாவில் அதிக ஆக்சிஜன் டேங்கர்களை பெற்றதில் கர்நாடக மாநிலம் முதல் இடத்தில் உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

பெங்களூரு,

மத்திய அரசின் உத்தரவின்பேரில் நாடு முழுவதும் ரெயில்வே சார்பில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் திரவ ஆக்சிஜன் நிரப்பட்ட 1,401 ஆக்சிஜன் டேங்கர்கள் இந்தியா முழுவதும் சென்று உள்ளன.

இந்த நிலையில் தென் இந்தியாவில் அதிக ஆக்சிஜன் டேங்கர்களை பெற்ற மாநிலம் என்ற பெயர் கர்நாடகத்திற்கு கிடைத்து உள்ளது. இதுகுறித்து ரெயில்வே நிர்வாக தலைவர் சுனீத் சர்மா வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

“வட இந்தியாவில் அதிகபட்சமாக டெல்லிக்கு 297, உத்தர பிரதேசத்திற்கு 276, அரியானாவுக்கு 141 திரவ ஆக்சிஜன் டேங்கர்கள் சென்று உள்ளன. தென் இந்தியாவை பொறுத்தமட்டில் கர்நாடகம் தான் அதிக ஆக்சிஜன் டேங்கர்களை பெற்று உள்ளது. 

அதாவது கர்நாடகம் 136 ஆக்சிஜன் டேங்கர்களை பெற்று உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆந்திரா 131, தமிழ்நாடு 128, தெலுங்கானா 113 திரவ ஆக்சிஜன் டேங்கர்களை பெற்று உள்ளன. இதுவரை கர்நாடகம் சுமார் 3 ஆயிரம் டன் திரவ ஆக்சிஜனை பெற்று உள்ளது.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story