டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் - முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், அங்கு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் பஜார்கள், மால்கள் ஆகியவை ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண்கள் அடிப்படையில் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாகவும், மெட்ரோ ரெயில் சேவை 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த தளர்வுகள் வரும் திங்கள் முதல் அமலுக்கு வரும் எனக் கூறிய கெஜ்ரிவால், 3வது கொரோனா அலையை எதிர்கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story