தடுப்பூசி முறைகேட்டை கண்டித்து பஞ்சாப் சுகாதார மந்திரி வீடு முற்றுகை


தடுப்பூசி முறைகேட்டை கண்டித்து பஞ்சாப் சுகாதார மந்திரி வீடு முற்றுகை
x
தினத்தந்தி 7 Jun 2021 12:56 AM IST (Updated: 7 Jun 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி முறைகேட்டை கண்டித்து பஞ்சாப் சுகாதார மந்திரி வீடு முற்றுகையிட்டு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

மொகாலி,

பஞ்சாப்பில் கொள்முதல் செய்த தடுப்பூசிகளை தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்திருப்பதாக மாநில அரசு மீது புகார் எழுந்துள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த மாநில அரசும் உத்தரவிட்டு உள்ளது.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக மொகாலியில் உள்ள சுகாதார மந்திரி பல்பிர் சிங் சித்துவின் வீட்டை ஆம் ஆத்மி தொண்டர்கள் முற்றுகையிட்டனர். மேலும் அவரது உருவபொம்மையையும் எரித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story