தீபாவளி வரை உணவு தானியங்களை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு - பிரதமர் மோடி

அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக ஜூன் 21 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
- உலகில் பெரும்பாலான நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
- 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரும் தொற்று மக்களை பாதித்துள்ளது.
- கொரோனா என்ற அரக்கனை ஒழிப்பதற்காக முகக்கவசம், ஆக்சிஜன் ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்கிறோம்.
- கொரோனா நமது மிகப்பெரிய எதிரி; அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான்.
- கொரோனா தொற்றால் மருத்துவ துறையில் அடிப்படைவசதிகளை நாம் மேம்படுத்தியுள்ளோம்.
- மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவு உயர்த்தியிருக்கிறோம்.
- அனைத்து கட்டமைபைப்புகளையும்பயன்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
- மக்களை காப்பாற்றுவதற்காக முப்படைகளையும் பயன்படுத்தினோம்.
- தடுப்பூசி மூலம் பல லட்சகணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கிறோம்.
- தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம்.
- முகக்கவசம் சமூக இடைவெளி போன்றவற்றை எக்காரணம் கொண்டும் மக்கள் கைவிட்டுவிடக்கூடாது.
- அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும்.
- மாநில அரசுகள் இனி தனியாக தடுப்பூசி கொள்முதல் செய்யத்தேவையில்லை.
- இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவிகித்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி மக்களுக்கு செலுத்தலாம்.
- இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்.
- தீபாவளி வரை ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும்.
- நவம்பர் மாதம் வரை 80 கோடி பேருக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.
- ரேஷனில் உணவு தானியங்கள் வழங்குவதால் 80 கோடி பேர் பயனைடவர்.
Related Tags :
Next Story