மராட்டிய அரசு கொரோனா பலி எண்ணிக்கையை மறைக்கவில்லை; சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே பேட்டி

மராட்டியத்தில் கொரோனா பலி எண்ணிக்கையை அரசு மறைக்கவில்லை என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
3-ல் ஒருவர்
நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. மேலும் நாட்டில் கொரோனாவால் இறப்பவர்களில் 3-ல் ஒருவர் மராட்டியத்தை சேர்ந்தவராக இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தநிலையில் கொரோனா காரணமாக இறந்த 11 ஆயிரம் பேரின் இறப்புகளை மராட்டிய அரசு பதிவு செய்யவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களிடம் கூறியதாவது:-
தனியார் ஆஸ்பத்திரிகளில்...
மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனியார் மற்றும் அரசு கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரிகள் உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் இறப்பு குறித்த விவரங்கள் தவறாமல் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அதேநேரம் தனியார் ஆஸ்பத்திரிகளில் இறப்பை பதிவு செய்ய தாமதம் ஆகிறது.எனவே இந்த எண்ணிக்கையில் வேறுபாடு ஏற்படுகிறது. அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளும் தங்கள் கொரோனா இறப்பு பட்டியலை தவறாமல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.இறப்பு புதுப்பிப்பு பணிகள் தவறாமல் செய்யப்படாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அனைத்து மாவட்டங்களிலும் தலைமை மருத்துவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இறப்பு குறித்த தரவுகள் டேட்டா ஆபரேட்டர்களால் பதிவேற்றம் செய்யப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக புதுப்பிப்பு பணி சில சமயம் சரியான நேரத்தில் செய்யப்படுவது இல்லை.
தடுப்பூசி ஒதுக்கீடு
மராட்டிய மக்கள் தொகை மற்றும் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் தடுப்பூசிகளை ஒதுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம்.தடுப்பூசி ஒதுக்கீடு கொள்கை குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும். மத்திய சுகாதார மந்திரி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story