டெல்லியில் நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் - முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு


டெல்லியில் நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் - முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Jun 2021 1:48 PM IST (Updated: 13 Jun 2021 1:48 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா தொற்றின் 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்றைய தினம் டெல்லியில் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் நேற்று 28 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 497 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதனையடுத்து டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாளை காலை 5 மணி முதல் டெல்லியில் பல்வேறு தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதன்படி டெல்லியில் நாளை முதல் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள்;-

* அனைத்து கடைகளும், மால்களும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

* தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் காலை 9 முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம். 

* உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி.

* மெட்ரோ ரெயில் மற்றும் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளுடன் செயல்பட அனுமதி

* ஆட்டோக்கள், டேக்சிக்களில் 2 பயணிகளுக்கு மட்டும் பயணம் செய்யலாம்

*வழிபாட்டுத் தளங்கள் பக்தர்களின்றி திறக்க அனுமதி

* திருமணம், இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதி

இது தவிர பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், திரையரங்குகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி மையங்கள், பூங்காக்கள் ஆகியவற்றிற்கான தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story