ஆன்லைனில் பயிற்சி ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு வசதி; உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்


ஆன்லைனில் பயிற்சி ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு வசதி; உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Jun 2021 9:52 PM GMT (Updated: 14 Jun 2021 9:52 PM GMT)

ஆன்லைனில் ஓட்டுனர் பயிற்சி உரிமம், வாகன பதிவு செய்யும் திட்டத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்.

புதிய முறை
மராட்டியத்தில் பயிற்சி ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு செய்ய ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய திட்டத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்றுநோய் காரணமாக ஆன்லைன் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வாகன பதிவு மற்றும் பயிற்சி ஓட்டுனர் உரிமம் பெற தொடங்கப்பட்ட ஆன்லைன் முறை பொதுமக்களுக்கு பயனளிக்கும். பயிற்சி வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவுக்காக குடிமக்கள் நீண்ட வரிசையில் மண்டல போக்குவரத்து அலுவலகத்தின் வெளியே காத்து நிற்பது தவிர்க்கப்படும்.

நேரத்தை மிச்சப்படுத்தும்...
நேரத்தையும், சக்தியையும் மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், ஓட்டுனர் உரிமத்திற்காக வரிசையில் நிற்கும் குடிமக்களை சமாளிக்க வேண்டிய சுமார் 200 அரசு அதிகாரிகளுக்கும் உதவும். ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் பயிற்சி ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் 20 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்காக மக்கள் கிட்டத்தட்ட ரூ.100 கோடி ரூபாய் செலவிடுகிறார்கள். வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் சாலைகள் அப்படியே இருக்கின்றன. வாகன நிறுத்த பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story