அடுத்த 3 நாட்களில் 56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்; மத்திய அரசு அறிவிப்பு

அடுத்த 3 நாட்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.
புதுடெல்லி,
உலகின் மிக பெரிய தடுப்பூசி திட்ட பணிகள் கடந்த ஜனவரி 16ந்தேதி தொடங்கி இந்தியாவில் நடந்து வருகின்றன. முதலில் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
அதன்பின்னர் அடுத்தடுத்து அந்த நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு, கடந்த மே 1ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன.
இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு (இலவச அடிப்படையில்) 27.28 கோடி கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது என மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இவற்றில், வீணானது உள்பட மொத்தம் 25 கோடியே 10 லட்சம் 3 ஆயிரத்து 417 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இன்னும் 2.18 கோடி தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கையிருப்பில் உள்ளன.
இதுதவிர, 56 லட்சத்து 70 ஆயிரத்து 350 தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மத்திய அரசு வழங்க உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story