ராமர் கோவில் கட்டும் செலவை கண்காணிக்க வேண்டும்: தேசியவாத காங்கிரஸ்


ராமர் கோவில் கட்டும் செலவை கண்காணிக்க வேண்டும்: தேசியவாத காங்கிரஸ்
x
தினத்தந்தி 18 Jun 2021 2:22 AM GMT (Updated: 2021-06-18T07:52:46+05:30)

அரசியல் சாராத பக்தர்கள் கமிட்டி ராமர் கோவில் கட்டும் செலவை கண்காணிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.

அரசியல் சாரா கமிட்டி
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாத சமீபத்தில் தகவல்கள் கசிந்தது. இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என சிவசேனா தெரிவித்தது. இதைகண்டித்து 
பா.ஜனதாவினர் நேற்று முன்தினம் தாதரில் உள்ள சிவசேனா பவனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சிவசேனாவினருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில் ராமர் கோவில் கட்டும் செலவை கண்காணிக்க அரசியல் சாராத பக்தர்கள் கமிட்டியை அமைக்கவேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.

ராமர் பயன்படுத்தப்படுகிறார்
இதுகுறித்து அந்த கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், “ ராமர் கோவிலின் புனிததன்மை காக்கப்பட வேண்டும். ராமர் கோவில் முழு நம்பிக்கை, உண்மையாக கட்டி முடிக்கப்பட வேண்டும் என அனைத்து பக்தர்களும் நினைக்கின்றனர். முறைகேடு புகார், அரசியலுக்காகவும், பொருளாதார லாபத்திற்காகவும் ராமர் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுகிறார் என்பதை காட்டுகிறது. அரசியல் சாராத ராமர் பக்தர்கள் அடங்கிய கமிட்டி வெளிப்படை தன்மையுடன் கோவில் கட்ட ஆகும் செலவை கண்காணிக்க வேண்டும்” என்றார்.

Next Story