தள்ளி வைக்கப்பட்டு உள்ள ‘நீட்’, ‘ஜே.இ.இ.’ தேர்வுகளை நடத்துவது குறித்து விரைவில் முடிவு - மத்திய அரசு தகவல்

தள்ளி வைக்கப்பட்டு உள்ள நீட், ஜே.இ.இ. தேர்வுகளை நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்த கல்வி ஆண்டு முதல் என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வான ஜே.இ.இ. 4 முறை நடத்தப்படுகிறது. இதில் முதல் 2 தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருந்த அடுத்த 2 தேர்வுகள் நடத்தவில்லை. இதைப்போல இந்த ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வும் நடத்தப்படவில்லை. கொரோனா 2-வது அலை காரணமாக இந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.
தள்ளி வைக்கப்பட்டுள்ள இந்த தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து மத்திய கல்வியமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. எனவே இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நிலுவையில் உள்ள ஜே.இ.இ. பிரதான தேர்வுகளை எப்போது நடத்துவது? மற்றும் ஆகஸ்டு 1-ந்தேதி நீட் தேர்வு நடத்த முடியுமா? என்பதை முடிவு செய்வதற்காக, தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story