ஆந்திர பிரதேசம்: 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி


ஆந்திர பிரதேசம்:  5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 20 Jun 2021 9:14 AM GMT (Updated: 20 Jun 2021 9:14 AM GMT)

ஆந்திர பிரதேசத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களில் 5.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

விஜயவாடா,

நாட்டில் கொரோனாவின் 2வது அலையில் சிக்கி மக்கள் அவதியுற்ற சூழலில், 3வது அலை பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியமுள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இதனால், பொதுமக்கள் கொரோனா விதிகளை முறையாக பின்பற்ற கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று நாட்டில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுபற்றி பொது சுகாதாரம் மற்றும் குடும்பநல இயக்குனரான மருத்துவர் கீதா பிரசாதினி கூறும்பொழுது, இந்தியாவில் கொரோனா 3வது அலை பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் உள்ளது.

அதனை முன்னிட்டு தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டுள்ளோம்.  நேற்று வரை 5.5 லட்சம் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.  இதுதவிர, மீதமுள்ள 4.5 முதல் 5 லட்சம் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம் என கூறியுள்ளார்.


Next Story