ஜூன் 24 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம்: சோனியா காந்தி


ஜூன் 24 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம்: சோனியா காந்தி
x
தினத்தந்தி 21 Jun 2021 4:50 PM IST (Updated: 21 Jun 2021 4:50 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி, 

காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்களுடனான கூட்டத்துக்கு கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி  அழைப்பு விடுத்துள்ளார். 

காணொலி காட்சி வாயிலாக வரும் 24 ஆம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழல் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத்தெரிகிறது. 

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்பட 5 மாநிலங்களுக்கு அடுத்தாண்டு  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  எனவே, தேர்தல் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. 

Next Story