மராட்டியத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: இன்று மீண்டும் தொடக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Jun 2021 3:38 AM IST (Updated: 22 Jun 2021 3:38 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி போதிய மருந்து இல்லாத காரணத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை முதல் 30 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று இரவு சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே அறிவித்தார். அப்போது அவர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மாநில அரசு ஒப்புதல் அளித்து உள்ளதாக கூறினார்.

மேலும் மராட்டியத்தில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.   

Next Story