தெலுங்கானாவில் ரூ.19.5 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்; தான்சானியா நபர் கைது


தெலுங்கானாவில் ரூ.19.5 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்; தான்சானியா நபர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2021 1:52 PM IST (Updated: 22 Jun 2021 1:52 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் ரூ.19.5 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்திய தான்சானியா நாட்டு விமான பயணி கைது செய்யப்பட்டார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் தான்சானியா நாட்டு ஆண் பயணி ஒருவரிடம் நடந்த சோதனையில் 3 கிலோ எடை கொண்ட ரூ.19.5 கோடி மதிப்பிலான ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த நபர் ஜோகன்னஸ்பர்க் நகரில் இருந்து தோஹா வந்து பின்பு இந்தியாவுக்கு வந்துள்ளார்.  அவரை போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story