மராட்டிய மாநிலத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

மராட்டிய மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் இன்று பகல் 11.57 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் பல்ஹர் மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. இதனால் மக்கள் சற்று பதற்றம் அடைந்தனர்.
ஆனாலும், நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story