மராட்டியத்தில் இன்று 6,727- பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் இன்று 6,727- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 Jun 2021 5:49 PM GMT (Updated: 2021-06-28T23:19:15+05:30)

தொற்று பாதிப்பை கண்டறிய இன்று 1,66,163- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்றைய பரிசோதனை எண்ணிக்கையை ஒப்பிடும் போது இன்று குறைவாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமான மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு சராசரியாக 9 ஆயிரத்தை தாண்டி இருந்தது. தொற்று பாதிப்பு குறைந்து பின்னர் அதிகரிக்கத்தொடங்கியதால் சில தளர்வுகளையும் மராட்டிய அரசு ரத்து செய்தது. 

இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 6,727- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்று 3,247- குறைவாக பதிவாகியுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 101- பேர் உயிரிழந்துள்ளனர். 

மாநிலத்தில் இன்று தொற்று பாதிப்பு விகிதம் 4.04-சதவிகிதமாக குறைந்துள்ளது.  மொத்த பாதிப்பு விகிதம் 14.65 சதவிகிதமாக இருக்கிறது. தொற்று பாதிப்பை கண்டறிய இன்று  1,66,163- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  நேற்றைய பரிசோதனை எண்ணிக்கையை ஒப்பிடும் போது இன்று மிககுறைவாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, நேற்றை  விட 44 ஆயிரம் மாதிரிகள் குறைவாக இன்று பரிசோதிக்கப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பு குறைவானதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனத்தெரிகிறது.  மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 874- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10,812- ஆக உள்ளது. Next Story