காஷ்மீரில் ராணுவ நிலையம் அருகே மீண்டும் டிரோன்கள் காணப்பட்டதால் பரபரப்பு


காஷ்மீரில் ராணுவ நிலையம் அருகே  மீண்டும் டிரோன்கள் காணப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Jun 2021 10:50 PM GMT (Updated: 29 Jun 2021 10:50 PM GMT)

நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அதிகாலையில் ரத்னுசாக், கலுசாக் ராணுவ பகுதிகளில் 2 டிரோன்கள் காணப்பட்டன.

ஜம்மு,

காஷ்மீரில் ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் டிரோன்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தின. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சதியினால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அதிகாலையில் ரத்னுசாக், கலுசாக் ராணுவ பகுதிகளில் 2 டிரோன்கள் காணப்பட்டன. அவற்றின் மீது அதிரடியாக இந்திய வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவை பறந்து போய் விட்டதாகவும், படைகளின் விழிப்புணர்வு மற்றும் அதிரடி அணுகுமுறையால் ஒரு பெரிய அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் மேலும் ஒரு டிரோன், ரத்னுசாக்-குஞ்ச்வானி பகுதியில் உள்ள ராணுவ நிலையம் அருகே நேற்று அதிகாலை 4.19 மணிக்கு காணப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பும், கண்காணிப்பும், உஷார் நிலையும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story